சித்திரா பெளர்ணமி

மாதம் தோறும் தான் பௌர்ணமி வருகிறது.சித்திரைமாதப் பௌர்ணமியில் அப்படியென்ன சிறப்பு?
அச்சுவினி முதல் ரேவதி வரையான இருபத்தேழு நட்சத்திரங்களில் பதின்நான்காவதாக வரும் சித்திரை நட்சத்திரம் அம்மனுக்குரிய சிறப்புத் தினமாக அமைகின்றது. மாதந்தோறும் வரும் இச்சித்திரை நட்சத்திர தினங்களில் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்துடன் கூடிவரும் சித்திரை நட்சத்திர தினம் சித்திரா பௌர்ணமி என்று சிறப்பித்துக் கூறப்படுகின்றது.
தாயாரை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருப்பதால் இந்நாள் பிதிர்களுக்குரிய விரத நாளாகவும் அமைகின்றது. தந்தையை இழந்தவர்கள் ஆடிஅமாவாசையன்று விரதமிருப்பது போன்று தாயாரை இழந்தவர்கள் சித்திரா பௌர்ணமி விரதத்தை மேற்கொள்வது விதியாயமைந்துள்ளது.
பெற்று, வளர்த்து, சீராட்டி வளர்த்தெடுத்த தாயாரை அவர் மறைந்த பின்பும் நன்றியுடன் நினைவுகூரும் நாளான இந்நாளில் விரதமிருந்து வழிபாடு செய்வதன் மூலம் தாயின் தாய்மையின் பெருமைகளை மனதிலிருத்தி அவரது ஆன்மா அமைதியடைய இறைவனைத் தொழும் நாளாகவும் இந்நாள் அமைகின்றது.

சித்திரா பௌர்ணமியின் சிறப்பு

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடி வரும் பௌர்ணமி நாள் சித்திரா பௌர்ணமி நாளாகும்.
இது வசந்தகாலம். காலங்களில் நான் வசந்தகாலமாக இருக்கிறேன் என்று பகவான் கண்ணன் பகவத்கீதையில் கூறுகிறார். இவ்வசந்த காலத்தில் தான் பெரும்பாலும் ஆலயங்களில் பிரம்மோற்சவம் (திருவிழா) நடைபெறுகிறது. அக்ஷய திருதியை போலவே இந்த நாளிலும் தானங்கள் செய்வது நன்மை தரும் என்று கருதப்படுகிறது.
வெய்யிலுக்கு இதமாக தயிர்சாதம், கைவிசிறி, பானகம், நீர்மோர் இவற்றை அந்தணர்களுக்குத் தானமாக அளிப்பது வழக்கம்.
உப்பில்லாமல் உணவருந்தி, பசும்பால், பசு நெய், பசுந்தயிர் தவிர்த்து சித்திரா பௌர்ணமி விரதம் இருந்து ஒரு மூங்கிலாலான முறத்தில் அரிசி, வெல்லம், மாங்காய், ஒரு நோட்டுப்புத்தகம், பேனா முதலியவையும் தானம் செய்யலாம்.

சித்திரா பௌர்ணமி

சித்திரா குப்தம் மஹா பிராஜ்னம்
லோகாகி பத்ரதாரிணம்
சித்ர ரத்னாம்பர தாரம் .
மத்யஸ்தம் ஸர்வதேஹினாம்,எந்தக் காரியாலயத்திலும் அல்லது கம்பெனிகளிலும் கணக்கு சரி பார்க்க ஒருஆடிட்டர் தேவைப்படுகிறார். இவர் வரவு சிலவு சரியாக இருக்கிறதா என்று பார்த்து சரியாக இல்லை என்றால் அதற்குத் தகுந்தாற்போல் தண்டனையும் கிடைக்கிறது. அபராதமோ அல்லது கோர்ட்டுக்கோ போகவேண்டி இருக்கும். அதே போல யமலோகத்திற்கும் ஒரு ஆடிட்டர் தேவைதானே… எத்தனைக் கோடி மக்களுக்கு பாப புண்ணியக் கணக்கு எழுத வேண்டும்? அதற்குத் தகுந்தாற்போல் வாழ்க்கையும் அமையும். யமலோக ஆபீஸில் ஆடிட்டர் சித்திர புத்திரன். இந்தச் சித்திர புத்திரன் பற்றி இரண்டு விதமான புராணங்கள்…
உலகத்திற்கெல்லாம் ஈசன் சிவபெருமான் ஒருதடவை ஏடும் எழுத்தும் கொண்டு கணக்கு எழுத ஒரு தேவதையைப் படைக்க எண்ணினார். அதன்படி ஒரு சித்திரம் வரைந்து அதற்கு உயிரூட்ட ஒரு தேவதைத் தோன்றினாள். அவளிடமிருந்து ஒரு அழகான புத்திரன் வர சித்திரத்திலிருந்து வந்ததால் சித்திரப் புத்திரன் என்று அழைக்கப்படலானான். இதே சித்திரப்புத்திரன் மீண்டும் ஒருமுறை சிவனருளால் காமதேனுவிற்குப் பிறந்து இதே பெயர் பெற்றார். இவனுக்கு எல்லோருடைய பாப புண்ணியக் கணக்குகளை எழுதும் வேலையைச் சிவபெருமான் கொடுக்க அதைப் பாரபட்சமில்லாமல் இவர் செய்து வருகிறார். குப்த் என்றால் ரகசியம்… நமது பாப
புண்ணியங்களின் ரிகார்ட் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. இவர் யமதர்ம ராஜா முன்னிலையில் பூத உடலைவிட்டு வரும் மனிதர்களின் பாப புண்ணியங்களைத் தன் ஏட்டிலிருந்து ஒப்பிக்கிறார். அதற்குத் தகுந்தாற்போல் விளைவும் ஏற்படுகிறது. கேது கிரஹத்திற்கு சித்திரபுத்திரன் அதிதேவதை.
இன்னொரு புராணம்… ஒருசமயம் நீளாதேவி ஒரு அப்ஸரஸ் சூரியனின் அழகில் காதல் கொண்டு தன்னை இழந்தாள். அதனால் சூரியப்பிரகாசம் கொண்ட மிகுந்த அறிவாளியாக ஒரு குழந்தை சித்திரை மாதம் சித்திரா நட்சத்திரத்தில் பௌர்ணமி அன்று பிறந்தது. சிறந்த கல்விமானாக விளங்கி பிரும்மாவிற்கு சிருஷ்டி வேலையில் உதவ ஆரம்பித்து.
கொஞ்சம் கொஞ்சமாக தானே அந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தார் இதனால் தேவர்களுக்கு பயம் ஏற்பட்டு “எங்கே பிரும்மாவின் வேலையையும் இவர் முழுவதும் எடுத்துக் கொண்டு விட்டால் என்ன செய்வது? “என்று தயங்கி சூரியனிடம் முறையிட்டனர். சூரியன் தந்தை ஆனதால் சித்திர புத்திரனிடம் நயமாகப் பேசி இதைவிடச் சிறந்த வேலை ம்க்களின் பாப புண்ணியக் கணக்கு எழுதுவது என்றுச் சொல்லி அந்த வேலையைச் செய்யுமாறு கூறினார். அதை ஏற்றுக்கொண்டு சித்திரபுத்திரன் அந்தவேலையை இப்போதும் செய்துவருகிறார்.
இந்த நாளில் விரதம் எடுத்து பூஜை செய்பவர் அத்ற்கென்று தனிக்கோலம் போட்டு, தெற்குப் பக்கம் மூடி உள்ளே சூரிய சந்திரரின் படம் வரைந்து, நடுவில் சித்திரபுத்திரனின் படம் வரைந்து, ஒரு கையில் எழுத்தாணியும் மற்றொரு கையில் ஏடும் வரைந்து
வழிபடுவாரகள். உப்பு இல்லாத உண்வு உண்டு பின் ஒரு மாணவனுக்கு பள்ளி நோட்டு புத்தகமும் பேனாவும் தானம் செய்வார்கள்.
இந்தப் புராண்ங்களை ஒரு பக்கம் ஒதுக்கினாலும் ‘நமக்கு மேலும் ஒருவனடா அவன் நாலும் தெரிந்த கலைஞனடா’ என்றபடி நாம்ம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நன்மையோ தீமையோ விளைவுகள் உண்டு. இதைத்தான் ‘விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமோ?’ என்பார்கள் ஆகையால் எப்போதும் ஒரு விழிப்புணர்வோடு நல்லெண்ணங்களோடு அன்பு உள்ளத்துடன் கடமைகளைச் செய்து வந்தால் புண்ணியமே சேரும்.
இந்தியாவில் தெந்நாட்டில் காஞ்சியில் நெல்லுக்கார வீதியில் இவர் ஒரு கோவிலில் இருக்கிறார். சித்திரா பௌர்ணமி அன்று இவருக்குத் தனி பூஜை உண்டு.
“சித்திரைப் பருவந்தன்னில் உதித்த நற் சித்ரகுப்தன்,
அத்தின அவனை உன்னி அர்ர்சனைக் கடன்களாற்றில்,
சித்தியும் பெறுவர் பாரந்தீருமே எமந்தன்னூரில்
இத்திறன் அறிந்தேயன்னோன் இரங்குவான் அரங்கள் சொற்றே”