அதிசயம் அற்புதம்

அதிசயம் அற்புதம்
swiss saint gallen lord murugan temple white peacock

சுவிஸ் கந்த சுவாமி கோவிலில் நடந்த அதிசயம்!

சுவிஸ் நாட்டிலே செங்காலன் மாநிலத்திலே றைன் நதிக் கரையினிலே மலையும் மலை சார்ந்து விளங்கும் அழகிய சென்மார்க்கிறேத்தன் பதியில் கோவில் கொண்டு வேண்டுவோர் வேண்டுவதை வழங்கி அடியார்களுக்கு பல அற்புதங்களைக் காட்டி அருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி கந்தஷ்டித் திருநாளில் காட்டிய அற்புதம் இது.

சுவிஸ் நாட்டிலே செங்காலன் மாநிலத்திலே றைன் நதிக் கரையினிலே மலையும் மலை சார்ந்து விளங்கும் அழகிய சென்மார்க்கிறேத்தன் பதியில் கோவில் கொண்டு வேண்டுவோர் வேண்டுவதை வழங்கி அடியார்களுக்கு பல அற்புதங்களைக் காட்டி அருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி கந்தஷ்டித் திருநாளில் காட்டிய அற்புதம் இது.

ஆழ்ந்த இறை நம்பிக்கை உடையவர்கள் இவ்விடயத்தை ஆன்மீகத்திற்கு உட்படுத்திப் பார்ப்பார்கள். இந் நிகழ்வு சாதரணமாக நடப்பதைப் போன்றும் எடுத்துக் கொள்ள முடியாது. சுவிஸ் தமிழர்கள் மத்தியில் பரபரப்பையும் இறையுணர்வையும் ஏற்படுத்திய அந் நிகழ்வு 07.11.2010 அன்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்தது. இறெயின்தாளர் தமிழ் இளைஞர்கள் விளையாட்டு மைதானத்தில் மாலைநேரம் கரப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது எங்கிருந்தோ வெண்மயில் ஒன்று பாதுகாப்புத் தேடி பறந்து வந்து அவர்களிடம் அடைக்கலமானது. பூனை ஒன்று துரத்தி வந்ததாக அங்கிருந்து கிடைக்கப் பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதையடுத்து அங்கிருந்தவர்கள் சென்மார்க்கிரெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலய நிர்வாகத்தினருக்கு தெரியப்படுத்தினார்கள்.

அத்தோடு முறையாக சுவிஸ் செங்காலன் மாநில காவல்துறையினருக்கு தகவல் கூறப்பட்டது.

தலத்திற்கு விரைந்த வந்த காவல்துறையினர் வெண்மயிலை கையகப்படுத்தி வளர்ப்புப் பிராணிகளுக்கான அடையாளக் குறியீடு கால்களில் பொருத்தப்பட்டுள்ளதா எனச் சோதித்ததில் அவைகள் காணப்படவில்லை. அதையடுத்து ஆலய நிர்வாகத்தினர் தமிழர்களின் அனுஸ்டான நாள், கந்தஷ்டி இரண்டாவது நாள் மயில் முருகனுடைய வாகனம் எனவும் அது இறைவனுக்கு உரியது எனவும் கூறி காவல்துறையினருக்கு விளக்கியபோது அவர்கள் அவ்வெண்மயிலை கோயிலில் வைத்து வளர்ப்பதற்கு அனுமதி கொடுத்து வெண்மயிலை கோயில் நிர்வாகனத்தினரிடம் ஒப்படைத்தனர்.

யாராவது உரிமை கோரினால் ஆலய நிர்வாகதத்துடன் தொடர்பு கொள்வதாகக் கூறினார்கள். இன்று சூரன்போர் நடைபெறவுள்ளது. இதுவரை யாரும் உரிமை கோரவில்லை.

அந்த மயில் தற்போது பாதுகாப்பாக ஆலயத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது. வசந்தமண்டப பூசை நடைபெறும் போது இம் மயிலுக்கும் தீபாராதனை நடைபெறுகிறது.

கந்தஷ்டி காலம் கந்தக்கடவுளுக்கு உரிய காலம். மயிலை வாகனமாக ஏற்ற காலமும் இதுவே. அன்றைய தினம் கதிர்வேலாயுதசுவாமி வெண்ணீற்றுடன் விபூதி காப்பு சாத்தப்பட்டு வெண்ணிற அலங்காரத்துடன் இருந்தவேளை வெண்மயிலின் வரவு மிகவும் பொருத்தமாகவும் சென்மார்க்கிரெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்திற்கு புதுப் பொலிவையும் நம்பிக்கையையும் உள்ளாக்கியுள்ளது.

பிந்திய செய்தி கடந்த செவ்வாய்க்கிழமை இது போன்ற ஒரு மயில் அதே இடத்தில் வந்து இறங்கியதாகவும் அதனை சுவிஸ் மக்கள் கண்டு காவல்துறையினருக்கு தங்கள் கையகப்படுத்தி Eichberg என்னும் கிராமத்தில் உள்ள சிறுவர் மிருகக்காட்சிச்சாலைக்கு கொடுத்ததாகவும் மயில் எங்கிருந் வந்தது யாருடையது என்பதை காவல்துறையினர் விசாரித்து வருவதாக இன்றைய Rheintaler எனும் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சுவிஸ் மக்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.