நவராத்திரி விரதம் – 27.09.2011

நவராத்திரி விரதம்

தினமும் மாலை 18.00 மணிக்கு – அம்பாளுக்கு அபிஷேகம்
இரவு 19.00 மணிக்கு – மூல மூர்த்திகளுக்கு பூசை
இரவு 19.30 மணிக்கு – அம்பாளுக்கு விசேட பூசை

விஜயதசமி (06.10.2011)

வியாழக்கிழமை
மாலை 17.00 மணிக்கு – அம்பாளுக்கு அபிஷேகம்
மாலை 18.30 மணிக்கு – மூல மூர்த்திகளுக்கு விசேட பூசை
இரவு 19.00 மணிக்கு – வாழை வெட்டு , பிராயச்சித்த அபிஷேகம் , ஏடு தொடக்கல் , கேதார கௌரி விரத ஆரம்பம் என்பன நடைபெறும்.

மெய்யடியார்களே!
அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில புரட்டாதிமாதம் 11ம்நாள் (27.09.2011) செவ்வாய்க்கிழமை தொடக்கம்; 20ஆம் நாள் (06.10.2011) வியாழக்கிழமை வரை நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற திருவருள் கூடியுள்ளது. துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி எனும் முப்பெருந் தேவியருக்கு உகந்தது நவராத்திரி விரத தினங்களாகும்.முதல் மூன்று தினங்கள் வீரத்தை அளிக்கும் துர்க்கைக்கும், அடுத்து வரும் மூன்று தினங்கள் செல்வத்தை அளிக்கும் லட்சுமிக்கும், அடுத்து வரும் மூன்று தினங்கள் கல்வியை அளிக்கும் சரஸ்வதிக்குமாக வருகின்றது. பத்தாவது நாளாகிய விஜயதசமியன்று சமீ விருட்ச பூசை என்று சொல்லப்படுகின்ற வன்னி வாழை வெட்டலும் ஏடு தொடக்கல் என்பனவும் நடைபெறும்.
அடியார்கள் இத்தினங்களில் வருகை தந்து அம்பாளுக்கு நடைபெறும் அபிஷேகம் பூசை என்பனவற்றில் கலந்து கொண்டு அம்பாளின் அருள் பெற்று இன்புற்று வாழ பிரார்த்திக்கும் வண்ணம் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

நவராத்திரி விரதம்

தினமும் மாலை 18.00 மணிக்கு – அம்பாளுக்கு அபிஷேகம்
இரவு 19.00 மணிக்கு – மூல மூர்த்திகளுக்கு பூசை
இரவு 19.30 மணிக்கு – அம்பாளுக்கு விசேட பூசை

விஜயதசமி (06.10.2011)

வியாழக்கிழமை
மாலை 17.00 மணிக்கு – அம்பாளுக்கு அபிஷேகம்
மாலை 18.30 மணிக்கு – மூல மூர்த்திகளுக்கு விசேட பூசை
இரவு 19.00 மணிக்கு – வாழை வெட்டு , பிராயச்சித்த அபிஷேகம் , ஏடு தொடக்கல் , கேதார கௌரி விரத ஆரம்பம் என்பன நடைபெறும்.
குறிப்பு: ஏடுதொடக்கும் மழலைகளுக்கு முன்கூட்டியே பதிவு எண்ணைப்பெற்றுக்கொள்வது சாலச்சிறந்தது.
அனைவரும் வருக அன்னை அருள் பெறுக.