Tempelkauf

Ein Zuhause für die zukünftige Generation

08.08.2024 பதிவு 

அன்புள்ள ஸ்ரீ கதிர் வேலாயுதன் அடியார்களே ஆதரவாளர்களே,

 

தற்போது எங்கள் கோவிலின் எதிர்காலத்திற்கான முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். நாம் வாடகைக்கு எடுத்துள்ள கோவில் வவிற்பனைக்கு வந்துள்ளது தற்போதைய வாடகை மாதம் 7,150.00 சுவிஸ் பிராங்குகள் இது 2023 ஆம் ஆண்டில் 3950.00 பிராங்குகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு கூடிய முதலீட்டுடன் (Eigenkapital) இக்கட்டிடத்தை வாங்கினால், வங்கிக்கு  திரும்ப செலுத்த  வேண்டிய கடன்தொகை தற்போதைய வாடகையை விட   குறைவாக இருக்கும்.

 

கட்டிடத்தின் விலை 2.1 மில்லியன் சுவிஸ் பிராங்குகள், மேலும் இந்த விலை 2025 வரை மட்டுமே செல்லுபடியாகும். அதன் பிறகு விலை உயர்ந்து, வாங்குவது கடினமாகிவிடும். கட்டிடத்தின் வாடகையால் வரும் வருவாய் 2023 ஆம் ஆண்டில்  90,000 பிராங்குகள்  தற்போது 118,000 பிராங்குகளாக உயர்ந்துள்ளது, இது கட்டிடத்தின் விலையை மேலும் உயர்த்துகிறது.

 

கட்டிடத்தை வாங்குவதால் நமக்கு பல நன்மைகள் உள்ளன:

 

1.      **நிதி நன்மைகள்**:

கட்டிடத்தை சொந்தமாக வாங்குவதன் மூலம் நாங்கள் பணத்தைச் சேமிக்க முடியும், ஏனெனில் மாதாந்த செலவுகள் தற்போதைய வாடகையை விட குறைவாக இருக்கும்.

2. **பாதுகாப்பு**: யாராவது மற்றவர்கள் இவ் கட்டிடத்தை வாங்கினால், நாங்கள் கோவிலை வழக்கம்போல் பயன்படுத்த முடியாத நிலை  ஏற்ப்படலாம். எங்கள் தற்போதைய வாடகையாளர் எங்களுக்கு பல சுதந்திரங்களை வழங்கியுள்ளார், இது எதிர்காலத்திலும் இப்படியே இருக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.

3. **கட்டிடத்திற்கான கேள்வி**: மற்ற மத அமைப்புகளும் கட்டிடத்தை வாங்க ஆர்வம் காட்டியுள்ளன. நாம் இப்போது செயல்படாவிடில், இந்த ஒரே ஒரு வாய்ப்பை இழக்கக்கூடும்.

4. **புதிய கோவிலின் கட்டுமான செலவுகள் மற்றும் சவால்கள்**: புதிய கோவிலை கட்டுவது  மிகவும் செலவானது மற்றும் பல சவால்களுடன் இருக்கும், உதாரணமாக, போதுமான கார் நிறுத்துமிடங்களுடன் (நாம் தற்போது 150 வாகனங்களை நிறுத்தும் வாய்ப்பு உள்ளது) ஏற்ற இடத்தைத் தேடுதல், கட்டுமான அனுமதிகளைப் பெறுதல் மற்றும் உள்ளூராட்சிமன்றத்தின் ( Gemeinde )  ஆதரவு. எங்கள் தற்போதைய உள்ளூராட்சிமன்றம் (Gemeinde) மற்றும்  சமூகம் மிகவும் ஆதரவாக உள்ளது, இது எமக்கு சாதாகமானது.

 புதிய கட்டிடம் கட்ட மக்கள் ஒத்துழைப்பு போதிய அளவில் இருக்க வேண்டும். தற்பொழுதே எம்மால் இவ் ஒத்துழைப்பை நிறைவாக வழங்க முடியவில்ல, ஏனெனில் எமக்குள்ள நேரப்பற்றாகுறை.

5. **நிதி ஆதரவு**: தற்பொழுது எமக்கு வங்கி கடன்வழங்குகிறது , ஏனெனில் கட்டம் பெருமதிமிக்கது. வங்கிக்கடனுக்கு இக்கட்டம் உத்தரவாதமாக உள்ளது. புதிய நிலத்தை வாங்கி கட்டுவதற்கு, வங்கிக்கு எங்களால் எவ்வித உறிதியையும் வழங்க முடியாது, இன் நிலையில் நாம் அதிக பணத்தை முதலீடு  (Eigenkapital) செய்யவேண்டிய நிலை ஏற்படும்.

6. **நம்பிக்கை**: இது கட்டிடத்தை வாங்க எங்கள் இரண்டாவது முயற்சி. மூன்றாம் முயற்சியில் விற்பனையாளர் மற்றும் வங்கியின் நம்பிக்கையை பெறமுடியாத சூழ்நிலை ஏற்படலாம்.

7. **இளம் தலைமுறைக்கு முக்கியத்துவம்**: எமது கோவில் எங்கள் இளம் தலைமுறைகளின் வாழ்க்கையில் ஒரு மையமாக விளங்குகிறது. இக்கோவிலை வாங்கி இளம் சமுதாயமான எமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் கையில் வழங்குவது எமது கையில் மட்டுமே உள்ளது.

8. **போக்குவரத்து இணைப்பு**: எங்கள் தற்போதைய இடம் சிறந்த போக்குவரத்து இணைப்புகளை கொண்டுள்ளது, அதில் நெடுஞ்சாலை, ரயில் நிலையம் மற்றும் அருகிலுள்ள கடைகள் அடங்கும்.

 

இந்த முக்கியமான முடிவில் பங்கேற்கவும், தாராளமாக நன்கொடை அளிக்கவும் அனைத்து உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் நாங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். அதிக சொந்த முதலீடு இந்த முயற்சியின் வெற்றிக்கும் எங்கள் கோவிலின் எதிர்காலத்திற்கும் முக்கியமானது.

 

உங்கள் ஆதரவுக்கு நன்றி!

ஆங்கில மற்றும் ஜெர்மன் மொழியினருக்கு>

ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் தமிழில் இருந்து  கூகிள் மொழிபெயர்ப்பான் மொழிமாற்றம் செய்யும் பொது எழுத்து அல்லது சொல்லுப்பிழை ஏற்றபடலாம் கவனத்தில் கொள்ளவும்.

ஆலய கொள்வனவுத்திருப்பணி

 

                                                                             

ஸ்ரீ கதிர்வேலயுதன் அடியார்களே!

உலகின் ஐம்பெரும் கண்டங்களில் ஒன்றான ஐரோப்பா கண்டத்தில், சுவிற்சலாந்து தேசத்தில், செங்காலன் மாநிலத்தில், சென்மார்க்கிரத்தன் கிராமத்தில், அல்ப்ஸ் மலை அடிவாரத்தில் கார்த்திகைப்பெண்கள் வளர்த்தெடுத்த வள்ளி தேவாசேன சமேத ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயம் நிரந்தர திருத்தலமாக அமைய இறையருள் கைகூடியுள்ளது.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று”

என்ற முது மொழிக்கேற்ப சைவப் பெருமக்களின் தலைமுறை கடந்த சன்மார்க்க இறை வழிபாட்டிடமாகவும், சைவப்பரம்பரையினர் வழிபாடு செய்வதற்கும்                     ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அடியவர்கள் ஆகிய நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து எமது முருகனுக்கு இத்திருத்தலத்தை வாங்குவதற்கான இத்திருப்பணித்தொண்டில் ஒன்றிணைவோம்.

 

இவ் ஆலய கட்டிடத்தின் உரிமையாளர் கட்டிடத்திற்கான மாதாந்த வாடகைதொகையை 3950.00 சுவிஸ் பிரங்குகளில் இருந்து 7150.00 சுவிஸ் பிரங்குகளாக உயர்த்தியதோடு விற்க்கவும் முயற்ச்சி எடுத்துள்ளார். இக்காரணமாக எம்மால் அவரோடு மேற்க்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின்போது இக்கட்டிடத்தை எமக்கே விற்பனைசெய்ய முன்வந்துள்ளார்.

 

காலத்தின் கட்டாயம், எதிர்கால சந்ததியை மற்றும் இந்த ஆலயத்தின் எதிர்கால பொருளாதாரம் என்பனவற்றை கருத்தில் கொள்ளும்பொது இவ் ஆலயகட்டிடத்தை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது. இவ் ஆலயக்கட்டிடம் மற்றும் வளாகத்தின் மொத்தப்பெறுமதி 2100.000.00 சுவிஸ் பிராங்குகள் ஆகும். இவ்விலையானது 2025 ஆண்டு ஆரம்பம் வரை மட்டுமே உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது. இவ் ஆலயத்தை மக்கள் சொத்தாக வங்கிக்கொள்வதற்கு வங்கிக்கடனை தவிர்த்து இன்னும் சுமார் 900.000.00 சுவிஸ் பிராங்குகள் தேவைப்படுகிறது. மேலும் கடனடிப்படையில்  கூடிய வட்டித்தொகையுடன்  சுமார் 500.000.00 சுவிஸ் பிராங்குகள் வரை வழங்க வீட்டு உரிமையாளர் முன்வந்துள்ளார். இது தவிர எமக்கு இன்னும் 400.000.00 சுவிஸ் பிராங்குகள் தேவைப்படுகிறது. இருப்பினும் நாம் முடிந்தவரை சொந்த கைமுதலை கொண்டு வாங்குவதே எமது ஆலயத்தின் எதிர்காலத்திற்க்கு சிறந்தது.

 

முருகன் அடியார்கள் அனைவருக்கும் எமது அன்பான வேண்டுகோள்

ஒவ்வொரு குடும்பத்திற்க்கும் குறைந்தபட்சம் தலா 1500.00 சுவிஸ் பிராங்குகள் என பொதுக்கூட்டத்தில் உங்களால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்க்கமைய உங்கள் உதவிக்கரங்களை எதிர்பார்த்து நிற்கின்றோம். (இத்தொகையை சுமார் 300 குடும்பங்களுக்கு மேல் எதிர்பார்கின்றோம்)

வர்த்தகர்கள் மற்றும் இயன்ற தனிநபர்கள் எமக்கு பெருந்தொகை பணத்தை கடனடிப்படையில் வழங்க முன்வாருங்கள். அதற்க்கான உடன்படிக்கை ஒன்றை சுவிஸ் சட்டங்களுக்கு உட்பட்டு  ஆலயத்தின் அறக்கட்டளை உங்களுடன் செய்துகொள்ளும் அத்தோடு ஆலய நிர்வாகம் மாற்றமடையும்  பட்டசத்திலும் ஆலய கொள்வனவுக்குழு பெரும்தொகை பணத்தை  மீளகொடுப்பதற்கு  உறுதிமொழி வழங்குகின்றது.

இப்பெரும் கைங்கரீயத்தில் அனைவரும் ஒன்றினைவோமாக”

நன்கொடைக்கான வங்கிகணக்கு இலக்கம்  


சந்தா
மற்றும் நன்கொடை படிவம்


தயவு செய்து இந்த ஆலயத்தின் வளர்ச்சிக்கு மாதாந்தம் 20 சுவிஸ் பிராங்குகள் செலுத்தி உதவுமாறு கேட்டுக்கொள்வதோடு மேலும் தங்களுக்கு இருக்கும் ஆலயம் சார்ந்த அனைத்து ஆக்கபூர்வமான வினாக்களுக்கும் ஆலய அறக்கட்டளையினர் ஆகிய நாம் எப்பொழுதும் பதில் வழங்க தயாராக உள்ளோம் என்பதையும் தாழ்மையுடன் அறியத்தருகின்றோம்.

     “மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”

                   ஆலய அறக்கட்டளையினர், பரிபாலனசபை, கொள்வனவுக்குழு

ஆலயம் வாங்குவாதற்கான நன்கொடைகளை மட்டும் இவ்வங்கியில் பரிமாற்றம் செய்யவும்